Monday, December 1, 2014

சென்னா மசாலா


தேவையானவை  :
     வெள்ளைச் சென்னா – 2 கப்

  வதக்கி அரைக்க:
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 2
  • பூண்டு – 8 பற்கள்
  • இஞ்சி விழுது – 1/2 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • தனியாத் தூள் – 1 டீஸ்பூன்
  • சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
  • சோம்பு – 1/2 டீஸ்பூன்
  • கொத்தமல்லித் தழைசிறிதளவு

செய்முறை:
  • வெள்ளைச் சென்னாவை 8 முதல் 10 மணி நேரம் நீரில் ஊறப்போட்டு 1 சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு குக்கரை சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து வேக வைக்கவும்.
  • வதக்கி அரைக்க என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை நன்கு சுருள வதக்கி, 2 டேபிள் ஸ்பூன் வேக வைத்த சென்னா சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி மிக்சியில் விழுதாக அரைக்கவும். (வேக வைத்த சென்னா 2 டேபிள் ஸ்பூன் அளவு சேர்ப்பதானது கிரேவியை கெட்டியாக்குவதுடன் சுவையை அதிகரிக்கும்.)
  • அரைத்த விழுதை மேலும் சிறிது எண்ணையில் நன்கு வதக்கி, வேக வைத்த சென்னா, உப்பு, வேக வைத்த சென்னாவில் இருந்த தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிட்டதும் கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

சுவைக்கான குறிப்பு:
தேவையானால் வேக வைத்த உருளைக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி கடைசியில் சேர்த்து ஒரு கொதி விடலாம். சுவை பிடித்தோர் உண்பதற்கு முன்பு சென்னாவில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து உண்ணலாம். சுவையான, சத்தான சென்னா மசாலா தயார்.

பச்சை பட்டாணி மசாலா


தேவையானவை :
  • பச்சை பட்டாணி - 1 கப் (வேகவைத்தது)
  • மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
  • மல்லித்தூள் - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – சிறிது
  • கொத்தமல்லி தழை – சிறிது
  • உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
அரைக்க :
  • வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
  • பட்டை, கிராம்பு – சிறிது
  • தேங்காய் - 3 ஸ்பூன் (துருவியது)
செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.
இதனுடன் அரைத்த மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும், பட்டாணியை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும், சுண்டிய பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

This recipe is taken from http://tamilnanbargal.com/tamil-samayal/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE

வெஜிடபிள் சால்னா



தேவையானவை :
  • காய்கறி – 1 கப் (காலிபிளவர், உரித்த பச்சை பட்டாணி, கேரட்என உங்கள் விருப்பப்படி)
  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டீ ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1/2 டீ ஸ்பூன்
  • மல்லித்தூள் (தனியா) – 1/4 டீ ஸ்பூன்
  • கரம் மசாலா – 1/4 டீ ஸ்பூன்
  • மஞ்சள்தூள் – 1/4 டீ ஸ்பூன்
  • தேங்காய்ப்பால் – 1 கப்
  • சீரகம் – 1/4 டீ ஸ்பூன்
  • பட்டை – 1 சிறிய துண்டு
  • கிராம்பு – 2
  • அன்னாச்சி பூ – 1

செய்முறை :

  • காய்கறிகளை பொடியாக நறுக்கி, முக்கால்வாசி அளவு வேகவைத்து, பின் தண்ணீரை வடித்துவிட்டு தனியே வைக்கவும்.
  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். (1 கப் அளவுக்கு தேங்காய்பால் கிடைக்கும் படி.)
  • ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும்.
  • சூடான எண்ணெயில் பட்டை, கிராம்பு, அன்னாச்சி பூ, சீரகம் சேர்க்கவும்.
  • சீரகம் பொரிந்தபின் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.
  • பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கிய பின் இதனுடன் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து பிரட்டி விடவும்.
  • தேங்காய்ப்பாலையும் இதனுடன் சேர்த்து சில நிமிடங்கள் நன்றாகக் கொதிக்கவிடவும்.
  • தேங்காய்ப்பாலின் பச்சை வாடை மடங்கி, நல்ல கூட்டுப் போல் திக்காக வரும்போது, வேக வைத்து வைத்திருக்கும் காய்கறிகளையும் இதனுடன் சேர்த்து சில நிமிடங்கள் மிதமான தணலில் அடுப்பில் வைத்திருக்கவும்.
  • தேவையான அளவு உப்பினை சால்னாவுடன் கலந்து கொள்ளவும்.
  • சூடாக பரோட்டாகளுக்கு சப்பாத்திக்கு சைடு-டிஷ்ஷாக பரிமாறவும்.




கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு குருமா


தேவையான பொருட்கள்:

  • உரித்த பச்சை பட்டாணி – சிறிது
  • கேரட் – 1
  • உருளைக்கிழங்கு – 2
  • தேங்காய்ப்பால் – 1 கப்
  • இஞ்சி – சிறிய துண்டு
  • பூண்டு – 2 பல்
  • பச்சை மிளகாய் – 4
  • பெரிய வெங்காயம் – 1
  • தக்காளி – 1 (சிறியது)
  • சீரகத்தூள் – 1/4 டீ ஸ்பூன்
  • கரம் மசாலா – 1/2 டீ ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
  • கடுகு – 1/4 டீ ஸ்பூன்
  • உளுந்து – 1/4 டீ ஸ்பூன்
  • கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
  • எண்ணெய் – சிறிது
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • கேரட்டை தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும்.
  • கேரட்டையும், உரித்த பச்சை பட்டாணியையும் வேக வைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டை விழுதாக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துருவிப் பாலெடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடேற்றவும். சூடான எண்ணெயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்துப் பொரிக்கவும்.
  • பின் இதனுடன் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கி விடவும்.
  • தொடர்ந்து தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கி, அதனுடன் மஞ்சள்தூள்,சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும்.
  • இதனுடன் தேங்காய்ப்பாலைச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பச்சை வாடை போக கொதிக்க விடவும்.
  • தேங்காய்ப்பாலின் பச்சை வாடை மடங்கி வரும் போது, அதனுடன் வேக வைத்த காய்கறிகளைச் சேர்த்துக் கிளறவும்.
  • குருமாவுடன் தேவையான அளவு உப்பைச் சேர்த்துக் கலக்கவும்.
  • மேலே கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
  • சூடான சப்பாத்தி, நான், ரொட்டி, பரோட்டா,குல்ச்சாகளுக்கு சைடு – டிஷ்ஷாக பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.