Monday, December 1, 2014

வெஜிடபிள் சால்னா



தேவையானவை :
  • காய்கறி – 1 கப் (காலிபிளவர், உரித்த பச்சை பட்டாணி, கேரட்என உங்கள் விருப்பப்படி)
  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டீ ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1/2 டீ ஸ்பூன்
  • மல்லித்தூள் (தனியா) – 1/4 டீ ஸ்பூன்
  • கரம் மசாலா – 1/4 டீ ஸ்பூன்
  • மஞ்சள்தூள் – 1/4 டீ ஸ்பூன்
  • தேங்காய்ப்பால் – 1 கப்
  • சீரகம் – 1/4 டீ ஸ்பூன்
  • பட்டை – 1 சிறிய துண்டு
  • கிராம்பு – 2
  • அன்னாச்சி பூ – 1

செய்முறை :

  • காய்கறிகளை பொடியாக நறுக்கி, முக்கால்வாசி அளவு வேகவைத்து, பின் தண்ணீரை வடித்துவிட்டு தனியே வைக்கவும்.
  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். (1 கப் அளவுக்கு தேங்காய்பால் கிடைக்கும் படி.)
  • ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும்.
  • சூடான எண்ணெயில் பட்டை, கிராம்பு, அன்னாச்சி பூ, சீரகம் சேர்க்கவும்.
  • சீரகம் பொரிந்தபின் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.
  • பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கிய பின் இதனுடன் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து பிரட்டி விடவும்.
  • தேங்காய்ப்பாலையும் இதனுடன் சேர்த்து சில நிமிடங்கள் நன்றாகக் கொதிக்கவிடவும்.
  • தேங்காய்ப்பாலின் பச்சை வாடை மடங்கி, நல்ல கூட்டுப் போல் திக்காக வரும்போது, வேக வைத்து வைத்திருக்கும் காய்கறிகளையும் இதனுடன் சேர்த்து சில நிமிடங்கள் மிதமான தணலில் அடுப்பில் வைத்திருக்கவும்.
  • தேவையான அளவு உப்பினை சால்னாவுடன் கலந்து கொள்ளவும்.
  • சூடாக பரோட்டாகளுக்கு சப்பாத்திக்கு சைடு-டிஷ்ஷாக பரிமாறவும்.




No comments:

Post a Comment