தேவையான பொருட்கள்:
- உரித்த பச்சை பட்டாணி – சிறிது
- கேரட் – 1
- உருளைக்கிழங்கு – 2
- தேங்காய்ப்பால் – 1 கப்
- இஞ்சி – சிறிய துண்டு
- பூண்டு – 2 பல்
- பச்சை மிளகாய் – 4
- பெரிய வெங்காயம் – 1
- தக்காளி – 1 (சிறியது)
- சீரகத்தூள் – 1/4 டீ ஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
- கடுகு – 1/4 டீ ஸ்பூன்
- உளுந்து – 1/4 டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
- எண்ணெய் – சிறிது
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- கேரட்டை தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும்.
- கேரட்டையும், உரித்த பச்சை பட்டாணியையும் வேக வைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- இஞ்சி, பூண்டை விழுதாக்கிக் கொள்ளவும்.
- பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- தேங்காயைத் துருவிப் பாலெடுத்துக் கொள்ளவும்.
- வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடேற்றவும். சூடான எண்ணெயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்துப் பொரிக்கவும்.
- பின் இதனுடன் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கி விடவும்.
- தொடர்ந்து தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கி, அதனுடன் மஞ்சள்தூள்,சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும்.
- இதனுடன் தேங்காய்ப்பாலைச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பச்சை வாடை போக கொதிக்க விடவும்.
- தேங்காய்ப்பாலின் பச்சை வாடை மடங்கி வரும் போது, அதனுடன் வேக வைத்த காய்கறிகளைச் சேர்த்துக் கிளறவும்.
- குருமாவுடன் தேவையான அளவு உப்பைச் சேர்த்துக் கலக்கவும்.
- மேலே கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
- சூடான சப்பாத்தி, நான், ரொட்டி, பரோட்டா,குல்ச்சாகளுக்கு சைடு – டிஷ்ஷாக பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.
This recipe is taken from the site of http://sankaris.curryplate.com/carrot-green-peas-potato-kurma/

No comments:
Post a Comment